குவைத் தூதரகத்தால் இம் முறை கொண்டாடப்படும் தேசிய தினக் கொண்டாட்டம் குவைத்தியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது முக்கியமாக நான்கு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது.

முதலாவது குவைத் சுதந்திரம் பெற்று ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி  பொன்விழா  கொண்டாடுகிறது

குவைத் சுதந்திரமடைந்து முழு இறைமையுள்ள நாடாக 19-06-1961 ல் மாறியது. பண்டைய குவைத்தில் அதிகமான குவைத்தியர்கள் முத்துக் குளிப்பதில் ஈடுபட்டிருந்த அதே வேளை  கடலை மையமாகக் வைத்து தொழில் புரிபவர்களாகவும் இருந்தனர். எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து குவைத், சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கை வகித்தது. அக்காலத்திலிருந்து குவைத் பல அபிவிருத்திகளையும் முன்னேற்றங்களையும் கண்டது. இது குவைத் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. குவைத் உருவாகிய மூலகாத்தாவாக மேன்மை தங்கிய அஷ்ஷெய்க் முபாரக் அல் ஸபாஹ் 1896-1915 கருதப் படுகிறார்.

இரண்டாவது  சதாமின் ஆக்கிரமிப்பிலிருந்து குவைத்தை விடுவித்து இருபது வருடங்கள் பூர்த்தி

சதாமின் ஆக்கிரமிப்பிலிருந்து குவைத்தை விடுவித்து இருபது வருடங்கள் பூர்த்தியடைகின்றது ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் குவைத்தை 2-8-1990 ல் ஆக்கிரமித்து ஏழு மாதங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவ்வேளை குவைத்தியர்கள் ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்களுடன் நாட்டை மீட்டெடுப்பதற்கு கடுமையான  அர்ப்பணிப்புகள் செய்தனர். இதன் விளைவாக 26-02-1991 ல் குவைத் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

மூன்றாவது குவைத்துக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் பூர்த்தி

இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையில் இராஜ தந்திர உறவுகள் அரம்பிக்கப் பட்டு நாற்பது வருடங்கள் இந்த வருடத்துடன் பூர்த்தியடைகிறது இரு நாடுகளுக்கிடையிலான இராஜ தந்திர உறவுகள் 19-02-1971 ல் ஆரம்பிக்கப்பட்டன.

குவைத்தில் இலங்கைத் தூதரகம் 1982 ம் ஆண்டு  திறந்து வைக்கப்பட்டது. அவ்வாறே கொழும்புpல் குவைத் தூதரகம் 12-3-1995ம் ஆண்டு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது.

அராபிய வியாபாரிகளின் வருகையைத் தொடர்ந்து இரண்டு நாடுகளின் உறவுகளும் வலுவடையத் துவங்கின. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2003ம் ஆண்டு குவைத்துக்கு மேற்கொண்ட விஜயம் இலங்கை குவைத் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் பயனாக பல உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டன. இலங்கைத் தேயிலையை 54 மூ குவைத்தினர்கள் பாவனை செய்கிறார்கள். குவைத் சந்தையில் இலங்கைத் தேயிலை முக்கிய இடத்தைப்பெறுகின்றது.

இன்று, அநேகமான குவைத்தியர்கள் இலங்கையை அவர்களது சுற்றுலா மையமாகத் தெரிவுசெய்துள்ளனர் வளைகுடா நாடுகளில் குவைத் இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக விளங்குகின்றது. இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சம்பந்தமான ஒப்பந்தமொன்று குவைத் அரசாங்கத்துடன் சென்ற 5-11-2009 ஆண்டு கைச்சாத்திடப் பட்டது. வளைகுடா நாடுகளில்லொன்றில் செய்து கொள்ளப்பட்ட முதலாவது ஒப்பந்தமாக  இது கணிக்கப்படுகின்றது.

தற்பொழுது 120,000 இலங்கையர்கள் குவைத்தில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்களது முழு உரிமைகளையும் குவைத்தில் அனுபவித்து வருகின்றனர்.

நான்காவது குவைத் அமீர் மேன்மைமிகு ஷேக் ஸபாஹ் அல் அஹ்மத் அல் ஜாபிர் அல்ஸபாஹ் குவைத் அமீராய் பதவியேற்று ஐந்து வருடங்கள் பூர்த்தி  

குவைத் நாட்டின் அமீர் மேன்மை தங்கிய அஷ்ஷெய்க் ஸபாஹ் அல் அஹ்மத் அல் ஜாபிர் அல்ஸபாஹ் பதவியேற்று ஐந்தாண்டுகளை இம்முறை குவைத் கொண்டாடுகிறது. 29-1-2006ம் ஆண்டு அமீராகப் பதவியேற்றார். இவரது காலத்தில் குவைத் ஒரு வியாபார மத்தியஸ்தலமாகத் திகழ்கின்றது. இப்பொழுது இவரது ஆட்சியின் கீழ் குவைத் பெரும் முன்னேற்றங்களையும் அபிவிருத்தியையும் கண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *